தீங்கு விளைவிக்கக்கூடிய கரிம உரங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது – நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம்

இரசாயன உரங்களை முழுமையாக இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட போதிலும், 99,000 மெட்ரிக் டன் கரிம உரத்தை இறக்குமதி செய்ய அரசு முயற்சிப்பதை தேசிய நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

மேலும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் கொண்ட கரிம உரங்களை இறக்குமதி செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுவதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்யாத அரசின் முடிவு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதாகவும் தரமற்ற கரிம உரங்களை இறக்குமதி செய்வதற்கான அரசின் முடிவு நுகர்வோர் உரிமை பாதுகாப்பினை மீறுவதோடு 99,000 மெட்ரிக் டன் தரமற்ற கரிம உரங்களை இறக்குமதி செய்ய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த கரிம உரத்தை நாட்டின் பிரபலமான அரசியல்வாதியின் ஒருங்கிணைப்பு செயலாளரின் சகோதரரால் நடத்தப்படும் இரு நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் தரமற்ற இத்தகைய உரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டால் மண், தாவரங்கள் மற்றும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இந்த உரத்தை ஆய்வு செய்துள்ள நிபுணர்கள் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு உரத்தை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அங்கீகரிக்க முடியாது எனவும் சம்பந்தப்பட்ட உரங்களை இறக்குமதி செய்வதைத் தடைசெய்வதற்காக நீதிமன்றத்திலிருந்து இடைக்காலத் தடை பெற எங்கள் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply