கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் தமிழ் மக்களுக்கு பச்சை தண்ணீரும் கூட தரமுடியாது

(வி.சுகிர்தகுமார்)
  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் பேச மட்டுமே முடியும். அபிவிருத்தி செய்ய முடியாது என வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் தமிழ் மக்களுக்கு பச்சை தண்ணீரும் கூட தரமுடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்; பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

2008 ஆம் ஆண்டு தான் மாகாண சபை கல்வி அமைச்சராக இருந்தபோது மாணவர்கள் கையில் பென் இருக்கவில்லை. மாறாக கண் (புருN) கொடுக்கப்பட்டிருந்தது. எனவும் கூறினார். இந்நிலையை மாற்றிய ராஜபக்ச அரசை தமிழ் மக்கள் வேண்டாம் என்றனர். இந்நிலையிலும்; கிழக்கில் 7000 ஆசிரியர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 5000 பேர் தமிம் முஸ்லிங்கள். இப்படி வேறு யார் செய்தது. கடந்த நல்லாட்சியில் உங்களுக்கு கிடைத்ததென்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

சுபீட்சத்தின் நோக்கு எனும் அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்; 2022 ஆம்; ஆண்டில் இடம்பெறவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயும் பணிகள் பிரதேச செயலகங்கள் தோறும் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் 5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் முதற்கட்டமாக 3 மில்லியனுக்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட வேண்டியுள்ளன.

இவை தொடர்பில் ஆராய்வதுடன் மக்களது குறைபாடுகளை கேட்டறிந்து கொள்ளும் முகமாகவே இக்கூட்டம் இடம்பெற்றது.

அத்தோடு கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் பிரதேசத்தில் உள்ள யானை வேலி பிரச்சினை மற்றும் பனங்காடு கிராமத்திற்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டிய குடிநீர் திட்டம் வங்கிகளின் ஏரிஎம் சேவை தொடர்பிலும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மக்களால் வழங்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக்கொண்;ட அமைச்சர் அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிலையில் அம்பாரை மாவட்ட பொதுஜனபெரமுன கட்சியின் அமைப்பாளர் ஆ.சாந்தலிங்கமும் இங்கு உரையாற்றினார்……

கலந்துரையாடலில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன்; கணக்காளர் க.பிரகஸ்பதி உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

Leave a Reply