பீரிஸ்-ஓ.ஐ.சி.பேச்சுவார்த்தை

ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை உட்­பட பல்­த­ரப்பு அரங்கில் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்­பினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட ஆத­ர­விற்கு வர­வேற்புத் தெரி­வித்­துள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக நாடு­களை தனி­மைப்­ப­டுத்­து­வதை எதிர்ப்­ப­தா­கவும் மாறாக தேசிய பிரச்­சி­னை­களை அந்­தந்த நாடு­களே தீர்த்­துக்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க்கில் நடை­பெற்­று­வரும் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வில் பங்­கேற்கச் சென்­றுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ், இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் யூசுப் அல்-­ஒ­தை­மீனைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இதன்­போது இவ்­வாண்டின் தொடக்­கத்தில் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கும் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பின் பொதுச் செய­லா­ள­ருக்கும் இடையில் இடம் பெற்ற தொலை­பேசி உரை­யா­டலை நினை­வு­கூர்ந்த அமைச்சர் பீரிஸ், இலங்­கைக்கும் சர்­வ­தேச முஸ்லிம் சமூ­கத்­திற்கும் இடை­யி­லான நீண்­ட­கா­லத்­தொ­டர்பைப் பற்­றியும் குறிப்­பிட்டார்.

பலஸ்­தீன அரசை முதலில் அங்­கீ­க­ரித்­த­வர்­களில் இலங்­கையும் ஒன்று என்­ப­துடன் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய பிர­த­ம­ரு­மான மஹிந்த ராஜ­பக்ச, இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­போது இலங்கை பலஸ்­தீன நட்­பு­றவுச் சங்­கத்தை நிறுவி 25 ஆண்­டு­க­ளாக அதன் தலை­வ­ரா­கவும் பணி­யாற்­றினார் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். அத்­தோடு பலஸ்­தீனப் பிரச்­சி­னைக்கு இலங்கை தொடர்ந்தும் ஆத­ர­வ­ளித்து வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

ஐ.நா மனித உரி­மைகள் பேரவை உட்­பட பல்­த­ரப்பு அரங்கில் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பு இலங்­கைக்கு வழங்­கிய ஆத­ரவை பாராட்­டிய வெளி­வி­வ­கார அமைச்சர், அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக நாடு­களை தனி­மைப்­ப­டுத்­து­வதை எதிர்க்கும் அதே­வேளை நாடுகள் தமது தேசிய பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார்.

மேலும் இதன்­போது இலங்­கைக்கும் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்­புக்கும் அதன் உறுப்பு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நெருக்­க­மான மற்றும் நீண்­ட­கால உற­வு­களை வர­வேற்ற அவ்­வ­மைப்பின் பொதுச்­செ­ய­லாளர் அல்-­ஒ­தைமீன், இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பு உல­க­ளா­விய ரீதி­யி­லுள்ள முஸ்­லிம்­களின் நலனில் அக்­கறை கொண்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்தார். அதே­வேளை முஸ்­லிம்கள் உள்­நாட்டு சமூக, கலா­சாரம் மற்றும் நாட்டின் சட்­டத்­திற்கு மதிப்­ப­ளித்­துச்­செ­யற்­ப­ட­வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.
ஏனைய சமூ­கங்­க­ளி­லி­ருந்து தம்மைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்டு வாழும் குழுக்­க­ளினால் ஏற்­ப­டக்­கூ­டிய அபா­ய­நிலை தொடர்பில் குறிப்­பிட்ட அவர், இது பிரி­வினை மற்றும் பேர­ழி­விற்­கான செயன்­முறை என்­ப­துடன் தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கும் வழி­வ­குக்­கக்­கூடும் என்றும் கூறினார்.

மேலும் கொவிட்-19 வைரஸ் தொற்­றினால் மர­ணிக்கும் முஸ்லிம் ஜனா­ஸாக்­களை இஸ்­லா­மிய மத­நம்­பிக்­கை­களின் பிர­காரம் அடக்கம் செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­ய­மைக்­காக அர­சாங்­கத்தைப் பாராட்­டிய அல்-­ஒ­தைமீன், தமது அமைப்பு தீவி­ர­வாதம், வன்­முறை ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டையே கொண்­டி­ருப்­ப­தா­கவும் தெரிவித்தார்.

அத்தோடு கொவிட் – 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே திட்டமிடப்பட்ட விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் முன்னேற்றகரமான செயற்பாடுகளை அவதானிப்பதற்குத் தூதுக்குழுவொன்றுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இதன்போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் யூசுப் அல்-ஒதைமீனுக்கு அழைப்புவிடுத்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave a Reply