மட்டக்களப்பில் இயற்கை பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில்,ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் கீழ் இயற்கை பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில், வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி போதனாசிரியர் பிரிவில் இயற்கை பசளை தயாரித்தல், இயந்திர பயன்பாடுகள் தொடர்பிலான பயிற்சி நெறி இடம்பெற்றது.

இதன்போது, ஓட்டமாவடி போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஐமால்டீனால் இயற்கை பசளை உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் கலந்து கொண்ட உற்பத்தியாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு இயற்கை பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்பட்ட கூட்டுப்பசளை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தினை கையாளும் முறைகள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டது.

ஓட்டமாவடி போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு வடக்கு உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், கமநலசேவை திணைக்கள பெரும்போக உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.ரசீட், கூட்டுப்பசளை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கருணாநிதி, செயலக விவசாய உத்தியோகத்தர்கள், இயற்கை பசளை உற்பத்தியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply