புகையிரத சேவை தொடர்பில் புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

களனியில் புகையிரதமொன்று தொழிநுட்பக் கோளாறினால் பிரதான புகையிரத பாதையின் செயற்பாடுகள் தாமதமாகியுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் அதிவேக புகையிரதம் களனி புகையிரத நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறை எதிர்கொண்டமையே தாமதத்திற்குக் காரணம் என பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பிரதான புகையிரத பாதையில் வழமையான கால அட்டவணையை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply