தியாகி திலீபனின் நினைவுதினத்தில் ஐந்து அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு!

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவு தினத்தில் தமிழ் தேசிய கட்சி ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தியாகி திலீபனின் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வுகள் இன்று , முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் வல்வெட்டித்துறையில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்துத்தெரிவிக்கையில்,

இந்திய, இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை ஈகம் செய்த மாவீரன் திலீபனின் நினைவு நாள் இன்றாகும்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? எனும் பாரதியாரின் கூற்றுக்கமைய இன்றும் எத்தனையோ பேர் அடிமைகளாக இருக்கும் இந்நிலையில், என்று எங்கள் சுதந்திர தாகம் தீரும் என்றும்,
தியாக தீபம் திலீபன் முன்வைத்தது போல இன்று நாங்களும் ஐந்து கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.அதாவது,

1.இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்காக (GENOCIDE)

2.இன படுகொலைக்காக இலங்கை அரசைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தல் (INTERNATIONAL CRIMINAL COURT-ICC )

3.இனப்படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்து (NON RECURRENCE)

4.தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்காக ஈடு செய் நீதி (REMIDIAL JUSTICE) கிடைப்பதை உறுதி செய்தல் ,

5 ஈடு செய் நீதி மூலம் இலங்கையில் வடக்குக் கிழக்கு பிராந்தியத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளைத் தெரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் பொதுசன வாக்கெடுப்பு (REFERENDUM) ஒன்றை நடத்துதல்

மேட்படி ஐந்து அம்சங்களை நிறைவேற்றுமாறு
குவாட் (QUARD)அமைப்பை (அமெரிக்கா,இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட்ட) கேட்டுக்கொள்கின்றோம்.எனத்தெரிவித்தார்.

Leave a Reply