வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி மட்டுமே வழங்கப்படும் – இராணுவ தளபதி

பைசர் அல்லது மொடோனா தடுப்பூசி உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே இராணுவத்தால் வழங்கப்படுகிறது என்று ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தகைய தடுப்பூசிகளை பெறுவதற்கு அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்றல் செய்யற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மொடோனா அல்லது பைசர் தடுப்பூசிகள் கொடுக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply