கொரோனா நோயாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கும் போது, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்கு இணையத்தளம் ஒன்றினை நடத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும் நோயாளர் பராமரிப்பு மருத்துவக் குழுவின் பிரதானி விசேட வைத்தியர் மல்காந்தி கல்ஹேன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டதன் பின்னர் இந்த இணையத்தளத்தினூடாகத் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
அத்தோடு , அவர்களது தகவல்களை சுகாதார அமைச்சுக்கும் அறிவிக்க முடியும்.
எனினும் இதன்மூலம் நோயாளர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இணையத்தளத்தை ஒருவாரத்திற்குள் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வைத்தியர் மல்காந்தி கல்ஹேன குறிப்பிட்டுள்ளார்.






