அமைச்சர் மகிந்தானந்த தலைமையில் 100 ஏக்கர் மிளகாய் அறுவடை ஆரம்பம்

நாவலப்பிட்டிய – கலபொட தோட்டத்தில் 100 ஏக்கர் மிளகாய் அறுவடை இன்று ஞாயிற்றுக்கிழமை விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமையில் ஆரம்பமாகியது.

மேலும் நாட்டில் ஆண்டுக்கு 5,000 மெட்ரிக் டன் மிளகாய்க்கான கேள்வி காணப்படுகிறது. இதன்பொருட்டு இம்முறை கமநல திணைக்களத்தினால் 3,000 ஹெக்டெயர் மிளகாய் பயிர்ச்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

அத்தோடு அதன் முதற்கட்டமாக நாவலப்பிட்டியில் மிளகாய் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிளகாயின் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் அதிகளவு அந்நிய செலாவணி வெளிநாட்டிற்கு செல்வதைத் தடுப்பதே கமநல திணைக்களத்தின் நோக்கமென அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply