தியாகி திலீபனுக்கு பல்கலைக்கழக மாணவர்களும் அஞ்சலி!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவுத்தவிப்பில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெறுகிறது.

அந்தவகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

பிரத்தியேகமான இடமொன்றில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது.

மேலும், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ள நிலையில், தடைகளையும் தாண்டி திலீபனுக்கு இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply