
ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ் மாஅதிபர் சி.டீ. விக்ரமரத்ன ஆகிய இருவரையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 10 மணிக்கு குறித்த இருவரையும் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த இருவரும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

