கொழும்பில் விஷேட பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர்

கொழும்பு,மே 11

கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கவச வாகனங்களைப் பயன்படுத்தி ரோந்து செல்லும் படையினர் இன்று காலை கொழும்பில் ரோந்துப் பணியை ஆரம்பித்துள்ளதுடன், விஷேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்கள் சகிதம் கொழும்பு, புறக்கோட்டை, மிரிஹான, கிருலப்பனை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதைக் காண முடிந்தது.

Leave a Reply