
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே சுமந்திரன் எம்.பி. இன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாடு பாரிய பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
இதன்போது, நாடாளுமன்றத்தினை கூட்டுவதற்கு முன்னர், பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும் எனக் கட்சித் தலைவர்களினால் கருத்து முன்வைக்கப்படடது.
இந்நிலையில் அடுத்த பிரதமர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பெயர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.