பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழுகாராம விகாரைக்கு விஜயம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் 06வது முறையாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சத்தியப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து வழுகாராம விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர் அங்கு நடைபெற்ற சமய அனுஷ்டானத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விஜயத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply