14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் கைது!

14 வயதுடைய பாடசாலை மாணவியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 65 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவிரவில பாக்றோ தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கைதுசெய்யப்பட்ட நபர், ஹற்றன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply