படுகொலை செய்யப்பட்ட ஆயிஷாவின் தந்தையின் ஆதங்கம்!

பண்டாரகமவில் பாத்திமா ஆயிஷா அக்ரம் என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இவர் கடந்த 27ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோழி இறைச்சி விற்கும் கடையில் இறைச்சி வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போயிருந்தார்.

அதனையடுத்து படுகொலை தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன் போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை வாக்கு மூலமாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் தந்தை இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் போதைவஸ்து பாவித்தேன். இதனால் பொறுப்பின்றி எனது பிள்ளையை இழந்துள்ளேன். இனிமேல் போதைப்பொருள் பாவிக்கவே மாட்டேன்.

இந்த ஊரிலும் இனி எவரும் போதைப்பொருள் பாவிக்கவே கூடாது எனவும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

பண்டாரகம, அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா அக்ரம் என்ற சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு சற்று அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் சம்பவம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலவர்கள் உட்பட 30 பேரின் வாக்குமூலங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply