அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தைத் தான் எதிர்க்கப் போவதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் நேற்று மாலை நடத்திய கலந்தாலோசனையின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கடந்த காலங்களில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்துக்கும் நான் ஆதரவளிக்கவில்லை.
தற்போதைய 21வது திருத்தச் சட்டத்தையும் ஆதரிக்கப் போவதில்லை.
நாடு முழுவதும் உள்ள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவரின் அதிகாரங்களைக் குறைக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் நான் ஆதரிக்க மாட்டேன் என்றார்.
பிற செய்திகள்