கொழும்பு, ஜுன், 01
கரையோர ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. பூஸ்ஸ ரயில்வே கடவைக்கு அருகாமையில், இன்று காலை ரயிலுடன் வாகனமொன்று மோதுண்டதில், இவ்வாறு போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில், போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக, அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.