இந்திய கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா அரசாங்கத்தின் கடன் வசதி அடிப்படையில் இலங்கைக்கு சீனி, கோதுமை மா, மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் தொகையை விடவும் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனி ஒரு கிலோவிற்கு 159 ரூபா செலவிடப்படுவதுடன் 5 ரூபா வரி செலுத்தப்படுகின்றது.
இதன்படி ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 164 என்ற போதிலும் இலங்கையில் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் விலை 180 ரூபா என்ற போதிலும் 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 158 ரூபா என்ற போதிலும் 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 165 ரூபா என்ற போதிலும் 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் 1049 ரூபா என்ற போதிலும் 1750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
பிற செய்திகள்