பனிக்கன்குளம் ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பனிக்கன்குளம் பாடசாலை வீதி ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று (03) இடம்பெற்றது.

01.06.2022 அன்று ஆலயத்தில் கிரிகைகள் ஆரம்பமாகி 02.06.2022 அன்று எண்ணெய்க்காப்பு இடம்பெற்று 03.06.2022 நேற்றைய தினம் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  இடம்பெற்றது.

சிவகுகக்குருக்கள்,சிவகுகநாதக்குருக்கள்,சிவகுகேந்திரக்குருக்கள்,சோமகிரிதரக்குருக்கள்,பரமேஸ்வரக்குருக்கள் ஆகிய சிவாச்சாரியர்களினால் இந்த கிரிகைகள் மஹா கும்பாபிஷேகம் என்பன சிறப்பாக இடம்பெற்று அதனைத்தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்று எம்பெருமான் உள்வீதி வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிசேகம் இடம்பெற்று வருகின்ற நிலையில் எதிர்வரும் 14.06.2022 அன்று சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

·  Facebook : சமூகம் தமிழ் நியூஸ்

·  Twitter: சமூகம் ட்விட்டர்

·  Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்

·  YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply