15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!

15 வயது சிறுமியை மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தனை கால்துறை பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் இச் சம்பவம் நடைபெற்றதாக கந்தானை பொலிஸார்; தெரிவித்துள்ளனர்.

அச் சிறுமியை தனது வீட்டிலேயே துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி தற்போது ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் கொழும்பில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் 13 ஆம் ஆண்டு மாணவன் எனவும், ருகஹவில, வல்போலாவைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவரின் தந்தை அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளர் என்பதும், தாய் ஒரு அரசு மருத்துவமனையில் தாதி என்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply