சாவகச்சேரி பகுதியில் பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு

சாவகச்சேரி -கோவிற்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்தை இன்று (06) காலை வலம்வந்து வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் சங்கிலியை இனந்தெரியாத நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு தப்பித்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வயோதிபப் பெண் ஆலயத்தை வலம் வந்து வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஆலய வாசல் பகுதியில் நின்று ஆலயத்தை இரு கை கூப்பி வணங்கிய வேளையில் பின்புறமாக வந்த திருடன் பெண்ணின் ஒன்றரைப் பவுண் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றுள்ளார்.

பெரியமாவடி சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 67வயதான பெண் ஒருவரின் சங்கிலியே இவ்வாறு அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply