நீர்வீழ்ச்சியில் ஆபாச வீடியோ – நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு!!

பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபாசமாக வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எல்பிட்டியைச் சேர்ந்த 24 வயது பெண்ணும், மகரகமவைச் சேர்ந்த 34 வயது ஆணும் பஹந்துடாவ நீர்வீழ்ச்சி அருகே ஆபாசமாக வீடியோ எடுத்து அதை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டமைக்காக காவல்துறையினர் இவர்களை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கு 10,800 ரூபாய் அபராதமும், 3 மாத சிறைத்தண்டனையும் 7 வருட ஒத்திவைக்கப்பட்ட தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், பலாங்கொட நீதிவான் நீதிமன்றால் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply