நிமல் சிறிபால டி சில்வா நீக்கம்; நீதிமன்றம் தடை உத்தரவு

சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கியதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

இதனை எதிர்த்து இன்று முற்பகல் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக இந்த தீர்மானத்திற்கு தடை கோரி மனுவொன்றை தாக்கல் செய்தார்.

சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு தலைவருக்கோ, பொதுச் செயலாளருக்கோ, மத்திய குழுவுக்கோ அதிகாரம் இல்லை என நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply