மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!

இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

பாதகமான வகையில் மின்சார சட்டம் திருத்தப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர குறிப்பிட்டார்.

1996ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றைய தினமும் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதற்காக மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply