ஆலை உரிமையாளர்களின் அரிசி விநியோகம் கண்காணிக்கப்படும்! விவசாய அமைச்சர்

அரசாங்கத்திடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்யும் அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி இருப்புக்களை சந்தைக்கு வெளியிடுகின்றார்களாக என்பது தொடர்பில் ஆராயுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட எந்த காரணமும் இல்லை எனவும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சந்தை தேவைக்கு ஏற்ப அரிசி இருப்புக்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை சதொச விற்பனை நிலையங்களுக்கு 500 மெட்ரிக்தொன் அரிசி விடுவிக்கப்பட்டது.

மேலும் 2,400 மெட்ரிக்தொன் அரிசி ஜூன் மாதத்தில் விடுவிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *