அரசாங்கம் திருடன் பொலிஸார் விளையாட்டை ஆரம்பித்துள்ளது என ஐக்கிய பிரஜைகள் ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார்.
காலி முகத்திடலில் உள்ளவர்களில் சிலர் போதைப்பொருட்கள் உபயோகிப்பவர்கள் மற்றும் எரிபொருள் வரிசையில் நிற்கின்றவர்கள் மாபியாவை சேர்ந்தவர்கள் என்று அரசாங்கத்தால் தகவல்கள் பரப்பப்படுகிறது.
இந் நாட்டில் மக்களிற்கு வழங்கப்படும் சான்றிதழ்கள்தான் இவை. மக்கள் நாளுக்கு நாள் துன்பத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் இவர்கள் இவ்வாறான தகவல்களை வெளியிடுகின்றனர்.
மக்களின் துன்பத்திற்கு பதில் இல்லை, ஆனால் மக்களை பற்றி பொய்யான கருத்துக்களை வழங்க முடியும், அவர்களால் அது மட்டுமே முடியும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டணி இன்று மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது. இது இவர்களிற்கு சாதாரண விடயமாகி விட்டது. இவர்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைத்துகொண்டுள்ளனர்.
பாவம் மக்கள் வரிசையில் நின்று கொண்டு இறக்கின்றனர். காலி முகத்திடலில் உள்ளவர்கள் நீங்கள் கூறுவது போன்று போதைப்பொருட்கள் உபயோகிப்பவர்கள் என்றால் பரவாயில்லை. அவர்கள் ரணில், கோட்டாவை விட சிறந்தவர்கள்.
மக்கள் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மக்கள் ரணிலை வெளியேற்றியது 2020ல். ஆனால் ராஜபக்ஷ சலுகையுடன் பதவிக்கு வந்தார்.
இலங்கை ஏன் ரஷ்யாவுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்தவில்லை, வணிகமாற்றமும் இல்லை.
நம் நாட்டில் டொலர்கள் இல்லை, மக்களிற்கு பொருட்களை வாங்க வழி இல்லை, காற்றின் மூலம் மின்சார உற்பத்தி அதானியிடம் செல்லும் போது விலை அதிகரிக்கும், இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்களின் மட்டுமே.
மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், யாருடன் கைகோர்த்து நிற்கப்போகிறீர்கள் என்று மற்றும் இராணுவத்தினர் மக்களுடன் இருங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.