நாட்டின் சில பகுதிகளில், ஒரு லீற்றர் 1000 ரூபாய் தொடக்கம் 1200 ரூபாய் வரையான விலைகளில் சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இரகசியமாக பெற்றோல் மற்றும் டீசலை விற்பனை செய்து வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பி பின்னர் குழாய்களை பயன்படுத்தி அவற்றை அகற்றி போத்தல்களில் அடைத்து விற்பனை செய்கின்றன என்று தெரிய வருகின்றது.
எரிபொருள் தட்டுப்பாட்டால், பயணிக்க மிகவும் சிரமப்பட்ட போதிலும் கறுப்பு சந்தையில் எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக
எரிபொருள் பாவனையாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறான சட்டவிரோத எரிபொருள் நிரப்பு நிலையங்களை சுற்றிவளைப்பதாக அரசாங்கம் கூறினாலும் அதுவெற்றிகரமாக இயங்குவதாக தெரியவில்லை என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிற செய்திகள்