யாழ்ப்பாணம் இணுவில் கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இணுவிலைச் சேர்ந்த சதீஸ் யோகராயா என்னும் 26 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.
வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் அறைக்குச் சென்றவர் அந்த அறையில் இருந்த மின் வயரில் இருந்த மின் கசிவில் அகப்பட்ட குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் உடலம் போதனா வைத்தியசாலையில் பிரதே பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.