தெளவல,ஜுன் 25
கல்கிஸை, தெளவல பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்து அவரிடமிருந்த பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர்கைது செய்துள்ளனர்.
சந்தேக கடந்த 16ஆம் திகதி கொள்ளையிடும் நோக்கத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெலவல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர்.
சந்தேக நபர் பல்வேறு கொள்ளைகள், திருட்டுக்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.