கொழும்பு,ஜுன் 25
இலங்கையில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய டொலரின் அளவு குறித்து நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச அளவு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கையானது ஜூன் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.