வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்ற ஒருவரது சடலம் மகாவலி கங்கையின் கிளை ஆற்றில் மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன் மற்றுமொரு நபருடன் கடந்த 22 ஆம் திகதி கந்தாகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இவர்களில் ஒருவர் அன்றைய தினமே பிடிப்பட்டுள்ளார்.
இவர்களில் ஒருவரே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேதப்பரிசோதனைகள் பொலன்நறுவை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன் வெலிகந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் இந்த முகாம் கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்கியது.
பிற செய்திகள்