கொழும்பு,ஜுன் 25
நாட்டில் மே 9 ஆம் திகதி கொட்டாவ, மாகும்புர பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம, மாகம்மன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது, கொட்டாவ, மகும்புர தெற்கு அதிவேக வீதியின் நுழைவாயில் அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அவரது பாதுகாவலர் மற்றும் சாரதி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானதாக
இந்த சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வெல்கமவின் வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டது.