21,600 லீற்றர் பெற்றோல் 33,400 லீற்றர் டீசல் பதுக்கல் -இதுவரை 675 பேர் கைது!

நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 675 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளன்.

இவர்களிடமிருந்து 21,600 லீற்றர் பெற்றோலும் 33,400 லீற்றர் டீசலும் 11,100 லீற்றர் மண்ணெண்ணெய்யும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *