
கோடாலியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்!
நுவரெலியா ஒலிபென்ட் மேல்பிரிவு தோட்டத்திலே நேற்று (25) இரவு 09.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோடரியால் தாக்கிய கணவன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளர்.
தாக்குதலில் 07,09 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுப்ரமணியம் சத்யவாணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





