
கொழும்பு, ஜுன் 27
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க ஆகியோர் ரஷ்யா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவர்கள் ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது.





