இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

தம்புள்ள,ஜுன் 27

சுற்றுலா இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3 ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றது.

139 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலளித்தாடிய இலங்கை அணி 17 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று இலக்கை கடந்தது.

எவ்வாறாயினும் 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில், 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 2 -1 என்ற அடிப்படையில், தொடரை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply