கல்வியமைச்சர் யுனஸ்கோ பயணம்

கொழும்பு, ஜூன் 28

கல்வி அமைச்சர் சுசில்  பிரேமஜயந்த, யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள கல்வி அமைச்சர்களின்  கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் நோக்கி பயணமாகியுள்ளார்.

இன்று அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், இக்கூட்டத்தொடர் நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாடசாலை கல்வியை இழந்துள்ள பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் நிலையான அபிவிருத்தியின் இலக்கு, சிறந்த கல்விக்காக அந்தந்த நாடுகளின் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் இக்கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

Leave a Reply