முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி!

இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, தமது முதல் இன்னிங்ஸ்காக துடுப்பாடிய இலங்கை அணி 59 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

அணிசார்பில் அதிகபடியாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் 39 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணியின் நெதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்வெப்சன் 55 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply