மூதூர் பிரதேச சபை செயற்றிட்டம் கையளிப்பு!(படங்கள் இணைப்பு)

மக்கள் பங்கேற்பை அதிகரிப்பதனூடாக உள்ளூராட்சி ஆளுகையை மேம்படுத்தல் திட்டத்தின் முக்கியமான அங்கமாக மூதூர் பிரதேச சபைக்காக தயாரிக்கப்பட்ட செயற்றிட்டம் இன்று (30) தெளிவு படுத்தப்பட்டு  சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஆசிய பவுண்டேசன் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்செயற்றிட்டம் நடவடிக்கையின் ஒரு அங்கமாக உள்ளூராட்சி சபையின் நல்லாட்சி ஆளுகையை மேம்படுத்தும் நோக்கமாக இச்செயற்றிட்டம் அகம் அமைப்பின் நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த இருவருடங்களாக அகத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த செயற்றிட்டம் பலமட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கிணங்க தயாரிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கதாகும். 

இங்கு நிபுணர்களான சட்டத்தரணியும் அகத்தின் வளவாளருமான  ஜெகநாதன் தற்பரன், வளவாளர் வே. காண்டீபன் ஆகியோர் திட்ட முன்மொழிவை தவிசாளர் தலமையிலான குழுவினருக்கு முன்வைத்தனர்.

இந்நிகழ்வு இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் தலமையில் நடைபெற்றது.இங்கு பிரதேசசபையின் தவிசாளர். எம்.எம்.ஏ.அரூஸ், உப தவிசாளர் கே. துரைநாயகம், சபையின் செயலாளர். வி. சத்தியஜோதி அகம் நிறுவன திட்ட உத்தியோகத்தர் வே. மோகன் உள்ளிட்ட உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சிவில் பிரதிநிதிகளென 40 பேர்வரை கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply