இனியும் அரசாங்கத்தை நம்பியிருக்க வேண்டாம்; சுகந்திரமாக செயற்படுங்கள்! பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல்

இனியும் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய அரசாங்கத்தில் தங்கி இருக்காது பொதுமக்கள் சுதந்திரமாக செயற்பட முன்வர வேண்டும் என இளைப்பாறிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரும் பேராசிரியருமான ரட்ண ஜீவன் கூல் தெரிவித்தார்

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்பொழுது நாட்டில் பொருளாதார நெருக்கடி தலை தூக்கி உள்ளது. இதன் காரணமாக அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைத்தையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்காது வெளியில் சுதந்திரமாக எமது அன்றாட செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக மின்சாரத்தை எதிர்பார்க்காது கிணற்றில் வாளியில்அள்ளி குளிக்க வேண்டும் அதேபோல் எரிபொருளை எதிர்பார்க்காது நாங்கள் முன்னர் ஒரு காலத்தில் எவ்வாறு பயணம் செய்தோமோ அதே போல் சைக்கிள்களை பாவித்து எமது பயணங்களை மேற்கொள்ளலாம்.

ஆனால் இன்றும் அரசாங்கத்தை எதிர்பார்த்து இருக்கின்றோம் அவ்வாறான நிலையினை இனியும் எதிர்பார்க்க முடியாது.

குறிப்பாக சமுர்த்தி என்ற ஒரு விடயத்தை பார்ப்போமாக இருந்தால் சமுர்த்தி அனைவருக்கும் வேண்டும் என கோரி வருகின்றோம்.

சாதாரண குறைந்த வருமானம் உள்ளவருக்கு சமுத்தி வழங்கப்படுகின்றது ஆனால் ஒரு கடையின் முதலாளியாக உள்ளவர் தனக்கும் சமுர்த்தி வேண்டும் என கேட்கின்றார்.

எனவே இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் அவ்வாறு மாற்றம் ஏற்படாதவிடத்தில் நாம் இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை வரும் என தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply