காலி கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தியது ஏன்? – இராணுவம் விளக்கம்

துடுப்பாட்ட வீரர்களின் கவனம் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டனர் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிசாந்த பிரேமரட்ண தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றவில்லை, அவர்களது ஆர்ப்பாட்டத்தை தடுத்துநிறுத்தினோம் என குறிப்பிட்டுள்ள அவர், துடுப்பாட்ட வீரர்களின் கவனம் பாதிக்கப்படும் என்பதாலேயே ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை கையில் வைத்திருந்தனர், அதன் காரணமாக துடுப்பாட்ட வீரர்களின் கவனம் சிதறும் நிலை காணப்பட்டது. இதன் காரணமாக அவர்களை அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புதன்கிழமையும் நேற்றும் இந்த சம்பவம் இடம்பெற்றது. காலி கோட்டையின் அரண்பகுதியில் துடுப்பாட்டத்தில் ஈடுபடவேண்டாம் என கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பலவந்தமாக அகற்றியமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கும் இராணுவ தளபதிக்கும் எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்து காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் அகற்றியது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

காலிகோட்டையின் அரண்பகுதி பொதுமக்களிற்கான பகுதி இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றுவதற்கான காரணங்கள் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply