சீன தூதுவர் – தம்பிக்க பெரேரா சந்திப்பு

கொழும்பு, ஜூலை 01

இலங்கையில் சீனத் திட்டங்களை
விரிவுபடுத்துவது குறித்து இலங்கைக்கான
சீனத்தூதுவர் சி சென்ஹொங் தொழில்நுட்ப,
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக
பெரேராவுடன் கலந்துரையாடல்களை
முன்னெடுத்துள்ளார்.

இலங்கைக்கான சீனத்தூதுவர் சி
சென்ஹொங் மற்றும் தொழில்நுட்ப, முதலீட்டு
ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா
ஆகியோருக்கு இடையில் கொழும்பிலுள்ள
சீனத் தூதரகத்தில் இடம்பெற்ற
சந்திப்பின்போதே சீன முதலீடுகளை
ஊக்குவிப்பது குறித்துக்
கலந்துரையாடப்பட்டுள்ளது.

சீனாவின் நிதியுதவியுடன் இலங்கையில்
முன்னெடுக்கப்படும் சில திட்டங்கள்
உள்ளடங்கலாகக் குறிப்பிடத்தக்களவிலான
கட்டமைப்புக்களை தம்மிக பெரேராவின்
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு
அமைச்சின்கீழ் கொண்டு வருவதற்கான
வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம்
வெளியிடப்பட்ட நிலையிலேயே இந்தச்
சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Leave a Reply