
யாழ்ப்பாணம், ஜூலை 1: இன்று ஆரம்பிக்க என திட்டமிடப்பட்ட திருச்சி, சென்னை- பலாலிக்கும் இடையிலான விமான சேவை இந்தியாவில் இருக்கக்கூடிய சில சட்ட திட்டங்கள் மற்றும் எரிபொருள் பிரைச்சனை காரணமாக பிற்போடப்பட்டுள்ளன. ஆனால், அது மிக விரைவில் ஆரம்பமாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னதாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இன்று விமான சேவை ஆரம்பிக்கப்படுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.





