நாமலின் கோரிக்கையை நிராகரித்த பங்காளிகள்!

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்வைத்த யோசனையை அரசாங்கத்தில் இருந்து விலகிய பொதுஜன பெரமுனவின் கூட்டணிக்கட்சிகள் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஊடாக நாமல் ராஜபக்ச இந்த யோசனையை கூட்டணிக்கட்சிகளுக்கு முன்வைத்துள்ளதுடன் வாசுதேவ நாணயக்கார ஊடாக முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை கட்சிகள் நிராகரித்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ராஜபக்சவினர் பொறுப்புக்கூற வேண்டும் என்பதால்இ அவர்களுடன் இணைந்து தொடர்ந்தும் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பது அந்த கட்சிகளின் நிலைப்பாடாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply