நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் துவிச்சக்கர வண்டிகளின் விலைகளும் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகின்றது.
இந்நிலையில் இரும்புக் கடைகளில் இருக்கும் துவிச்சக்கரவண்டிகளிற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் கிளிநொச்சி மக்கள் துவிச்சக்கர வண்டி பயன்பாடு தொடர்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
நாட்டில் புதிய துவிச்சக்கர வண்டிகள் இல்லாத நிலையிலு்ம, இற்குமதியின்மையாலும் கடும் கிராக்கி நிலவுகின்றது. புதிய ஜப்பான் துவிச்சக்கர வண்டி ஒன்றில் விலை 60 ஆயிரத்தை கடந்துள்ள அதே வேளை நாளுக்கு நாள் அதன் விலையும் அதிகரித்து செல்கின்றது.
இந்த நிலையில், இரும்பு கடைகளில் எடைக்காக விற்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை பெற்று சீரமைத்து பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் படிப்படியாக உலக நீரோட்டத்திற்கு அமைவாக மோட்டார் வாகன பாவனை மாவட்டத்தில் அதிகரித்தது. இந்த நிலையில் வீட்டு மூலைகளில் காணப்பட்ட துவிச்சக்கர வண்கள் பாவனை குறைந்தமையால் பலரால் விற்கப்பட்டது.
அதிலும் அதிகமான துவிச்சக்கர வண்டிகள் பாவனை நிலையில் காணப்பட்டபோதிலும் இடைஞ்சலை காரணம் காட்டி இரும்பு கொள்வனவாளர்களிற்கு எடைக்கு கொடுத்த சம்பவங்களும் அதிகமாகவே உள்ளது.
குறித்த துவிச்சக்கர வண்டிகள் ஒவ்வொன்றும் 300 ரூபா முதல் 500 ரூபா வரை எடைஅடிப்படையில் விற்பனை செய்யப்பட்டதுடன், பணத்திற்கு பதிலாக பிளாஸ்ரிக் பேசின் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டது.
ஆனால், தற்பொழுது மோட்டார் வாகனங்களை பயன்படுத்த எரிபொருள் பற்றாக்குறை காணப்படும் நிலையில் துவிச்சக்கர வண்டியின் தேவைப்பாடு மக்களிற்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே புதிய துவிச்சக்கர வண்டிகளிற்கு கடும் கிராக்கி ஏற்ட்டது,
புதிய துவிச்சக்கர வண்டியை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மீண்டும் இரும்பு கொள்வனவு செய்யப்பட்ட இடங்களிற்கு சென்று அதனை மக்கள் வாங்கி வருகின்றனர். ஆனால் தற்பொழுது அதன் எடைக்கான பெறுமதி குறைந்தது 10 ஆயிரம் ரூபாவாக காணப்படுகின்றது.
அதனை பெற்றுக்கொண்டு சீரமைப்பதற்காக மேலும் 15 ஆயிரம் ரூபாவரை செலவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்டுப்பாடின்றி துவிச்சக்கர வண்டிக்கான பொருட்களின் விலையும் சடுதியாக அதிகரித்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.





பிற செய்திகள்
- மாட்டு வண்டிலில் பாடசாலை செல்லும் மாணவர்கள்
- அதிவேக வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்தியா
- மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து
- பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka





