விபத்தில் சிக்கிய பிரபல சிங்கள நடிகர்!

அனுராதபுரம் தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூத்த நடிகர் ஜாக்சன் ஆண்டனி மற்றும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலாவ பிரதேசத்தில் காட்டு யானையுடன் அவர்கள் பயணித்த வாகனம் மோதியதில் நடிகர் மற்றும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply