கோரிக்கையை நிராகரித்த நாமல்

கொழும்பு,ஜுலை 03

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமான பத்து அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான பத்து அரசியல் கட்சிகளும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஊடாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

பத்து கட்சிகளிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முன்னாள் அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply