நாவலப்பிட்டியில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

நாவலப்பிட்டி,ஜுலை 03

எரிபொருள் நெருக்கடி, சமையல் எரிவாயு தட்டுபாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் இன்று மதியம் கையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாவலப்பிட்டியில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று தற்போதைய ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் எனக்கோரி தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply