பசறை விபத்தில் படுகாயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

பசறை-மடுல்சீமை 3ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்டப் தன்னமலை பகுதியை நோக்கி பயணித்த குறித்த முச்சக்கரவண்டி மடூல்சீமை வீதியில் மூன்றாம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில், பசறை வைத்தியலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply